பக்கங்கள்

பக்கங்கள்

13 டிச., 2014

இந்தியாவை பழி தீர்த்த அவுஸ்திரேலியா 
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி  அடைந்தது.

 
அடிலெய்டில் இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வந்தது.
 
இந்த நிலையில் இன்றைய ஐந்தாம் நாள் போட்டியில் வெறும் 11 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அவுஸ்திரேலிய அணியிடம் தோல்வியைத் தழுவியது.
 
மதிய தேநீர் இடைவேளை வரை 205 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த இந்திய அணி முரளி விஜய் 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து வரிசையாக விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.
 
முடிவில் 315 ஓட்டங்கள் மட்டும் எடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை முடித்தது. அணித்தலைவர் விராட் கோஹ்லி (141 ஓட்டங்கள்) சதமடித்தது வீணானது.
 
அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் லயான் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது அந்த அணியின் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்தார்.