பக்கங்கள்

பக்கங்கள்

13 டிச., 2014


ஆளும் கட்சியின் பரப்புரையில் ஈடுபடுமாறு கிரிக்கெட் வீரர்களுக்கு அழுத்தம் 
 ஆளும் கட்சியின் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுமாறு கிரிக்கெட் வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின்
முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜூன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார். 
 
 
வத்தளையில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அர்ஜூன ரணதுங்க இந்த செயல் குறித்து கிரிகெட் வீரர்கள் தமக்கு முறையிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
 
 
இலங்கை தேசிய அணியின் கிரிக்கெட் வீரர்கள் மீது இவ்வாறு அழுத்தம் கொடுக்கப்படுவதால் விரைவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டினார்.
 
 
தற்போதைய அரசாங்கத்தை போன்று இலங்கையின் வேறு எந்த அரசாங்கங்களம் விளையாட்டுத்துறையில் அரசியல் தலையீடு செய்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
 
2010 ஆம் ஆண்டின் பின்னர் அதிகளவில் விளையாட்டுத்துறையில் அரசியல் தலையீடு காணப்படுவதாகவும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.