பக்கங்கள்

பக்கங்கள்

27 டிச., 2014

கேரளாவிலும் 58 பேர் இந்துக்களாக மாற்றம்


கேரள மாநிலம், கோட்டயத்தில்  நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை 58 பேர் இந்து மதத்துக்கு மாறியுள்ளதாக விஷ்வ இந்து பரீஷத் அமைப்பு தெரிவித்துள்ளது. கேரளாவில் கிறிஸ்மஸ் தினமான நேற்று முன்தினம் வியாழக்கிழமை, பல்வேறு இடங்களில் மதமாற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வைக்கம், குமரகம், கஞ்சிரப் பள்ளி உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்தவர்கள், தாங்களாகவே விருப்பப்பட்டு இந்து மதத்துக்குத் திரும்பியுள்ளனர். அதில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள். ஒருவர் முஸ்லிம். பொன்குன்னம் பகுதியிலுள்ள புதிய காவுதேவி கோயிலில் 42 பேரும், திருவானைக்கரையிலு ள்ள ஸ்ரீகிருஷ்ண சாமி கோயிலில் 16 பேரும் மதம் மாற்றம் செய்து கொண்டனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.