பக்கங்கள்

பக்கங்கள்

27 டிச., 2014

பசிலுடன் பேச்சுவார்த்தை தோல்வி: ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறுகிறது

அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது உறுதியென கட்சி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
கடைசி நேரத்தில், ரவூப் ஹக்கீம் உட்பட்ட முஸ்லிம் காங்கிரஸ்
முக்கியஸ்தர்கள் இன்று காலை அமைச்சர் பசில் ராஜபக்‌சவுடன் 45 நிமிடங்கள் அளவில் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருப்பதாகவும் தெரிய வருகின்றது.
இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து இன்று பிற்பகல் அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.