பக்கங்கள்

பக்கங்கள்

13 டிச., 2014

பதுளையில் நிலநடுக்கம் 600 குடும்பங்கள் வெளியேற்றம் 
பதுளை, ஹப்புத்தளை தம்பே தன்ன பிரதேசத்தில் உள்ள மவுசாக்கலை
 பெருந்தோட்டத்தின் சுமார் 600 தமிழ் தொழிலாளர் குடும்பங்கள்
அவசரமாக சுமார் 6 கிலோ மீற்றருக்கு அப்பாலுக்கு புதுக்காடு என்ற இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

நேற்று இரவு 7.45க்கும் 8 மணிக்கும் இடையில் குறித்த தோட்டத்தில் உள்ள சுமார் 10 லயன் குடியிருப்புகளின் கூரைகள் நிலநடுக்கத்தில் நடுங்குவதைப் போன்று சத்தத்துடன் நடுங்கியுள்ளன.

இதனையடுத்து குறித்த 10 லயன்களிலும் உள்ள சிறியவர் மற்றும் பெரியோர் என சுமார் 600க்கு மேற்பட்டவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்தநிலையில் அவர்களை சுமார் 6 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள புதுக்காடு என்ற இடத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக தோட்ட முகாமையாளர் தெரிவி த்துள்ளார்.

எனினும் குறித்த நடுக்கத்தின் போது எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த தோட்டத்தில் ஏற்கெனவே மண்சரிவு தடயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் புவிசரிதவியல் திணைக்களம் நேற்றும் இந்த இடத்தை அபாயமிக்க இட மாக அறிவிக்கவில்லை என்
பது குறிப்பிடத்தக்கது.