பக்கங்கள்

பக்கங்கள்

16 டிச., 2014

சூரிச் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் திங்கள் கிழமை மர்ம நபர் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பல விமானங்கள் தாமதமாகியுள்ளது.
சுவிஸின் முக்கிய விமான நிலையமான சூரிச் விமான நிலையத்தில் நேற்று, மர்ம நபர் ஒருவரிடம் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகள், விமான நிலையத்தை பகுதியளவு மூடிவிட்டு பாதுகாப்பு படையினர் உதவியுடன் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சோதனையினால் பல விமானங்கள் தாமதமாகியுள்ளது. சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரியவந்ததையடுத்து அனைத்து விமானங்களும் தாமதாக பயணத்தை தொடங்கியுள்ளன.
மேலும், இந்த சோதனையினால் எந்த விமானமும் ரத்து செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.