பக்கங்கள்

பக்கங்கள்

25 டிச., 2014

அசாம் மாநிலத்தில் துப்பாக்கிச் சூட்டில் 76க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலி: ஜி.கே.வாசன் கண்டனம்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– 

உலகத்தில் தீவிரவாதமும், பயங்கரவாதமும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் பாகிஸ்தானின் பெஷாவர் ராணுவப் பள்ளியில் 140–க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர்கள் மற்றும் ஆசிரியரும் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல். 

அசாம் மாநிலத்தில் போடோ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 76–க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியானார்கள். இந்தியாவை பொருத்தவரை யார் ஆட்சி பொறுப்பில் இருந்தாலும், எந்த மாநிலத்திலும், அசம்பாவிதங்கள் எங்கும் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசின் கடமை. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து கண்காணித்து நடவடிக்கைகள் மேற்கொண்டு, அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.