பக்கங்கள்

பக்கங்கள்

25 டிச., 2014

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகளில் இருவர் கட்சி தாவினர் 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய பிரதிநிதிகள் இருவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளனர். 

 
ஜனாதிபதி தேர்தல் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சி , எதிர்க்கட்சி பிரதிநிதிகள் கட்சிதாவி வருகின்றனர்.
 
இந்தநிலையில் ஆளும்கட்சிக்கு ஆதரவாகவிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்  உபதலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினரான உதய குமார் மற்றும் நுவரெலிய பிரதேசசபை உறுப்பினர் நாகராஜன் ஆகிய இருவருமே இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனைந்து கொண்டுள்ளனர்.
 
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.