பக்கங்கள்

பக்கங்கள்

29 டிச., 2014

ஜனாதிபதி தேர்தலுக்கு 9 நாட்கள் உள்ள நிலையில் சல்மான்கான் இலங்கை வந்தடைந்துள்ளார்


பிரபல ஹிந்தி நடிகர் சல்மான்கான் மற்றும் பொலிவுட் நடிகை ஜெக்குலின் பெர்ணான்டஸ் ஆகியோர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருடன் பொலிவுட் நட்சத்திரங்கள் ஆறு பேர் இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னரும் பல தடவைகள் திரைபடங்களுக்காவும் விருது வழங்கும் நிகழ்வுகளுக்காகவும் சல்மான்கான் இலங்கைக்கு வந்துள்ளார்.
ஜெக்குலின் பெர்ணான்டஸ் இலங்கையை சேர்ந்தவர் என்பதுடன் மிஸ் ஸ்ரீலங்கா பட்டத்தை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் அவரது விஜயம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதேவேளை சல்மான்கான் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
சல்மான்கான் ஜனாதிபதியின் குடும்பத்தினருடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளார். இவரது தங்கையின் திருமண நிகழ்வில் நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.