பக்கங்கள்

பக்கங்கள்

29 டிச., 2014

திருகோணமலை தமிழ் மாணவன் உயிரியல் பிரிவில் சாதனை



திருகோணமலை, உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் சிவகுமாரன் இந்துஜன் தேசிய மட்டச் சாதனை மூலம் திருகோணமலை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழிப் பிரிவில் முதலாம் இடத்தினையும், தேசியமட்டத்தில்  மூன்றாம் இடத்தினையும், மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினையும் பெற்றுள்ளார்.
இதன் காரணமாக சிவகுமாரன் இந்துஜன்,  உவர்மலை விவேகானந்தா கல்லூரிக்கும், திருகோணமலை மாவட்டத்துக்கும், கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்து சாதனை படைத்துள்ளார்.