பக்கங்கள்

பக்கங்கள்

2 டிச., 2014

காரைநகர், களபூமி கிராமம் வெள்ளத்தில் மூழ்கியது 
காரைநகர், களபூமி கிராமம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.  
 
                              
 
 
இதனால் 250 மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளது. நேற்று இரவு வரை அருகிலுள்ள தேவாலயம் ஒன்றில் தங்கியிருந்த நிலையில், அந்த பகுதியும் வெள்ளத்தில் முழ்கியதன் காரணமாக இன்று காலை அருகிலுள்ள சுந்தரமூர்த்தி ஆரம்ப பாடசாலையில் தங்கியுள்ளனர். 
 
தங்களுக்கு இதுவரை எந்த உதவிகளும் வழங்கப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டினர். நீர்ப்பாசன திணைக்களத்தால் தமது பிரதேசத்திற்கு பின்னால்  உவர் நீரை தடுப்பதாக கூறி அணைக்கட்டு  கட்டப்பட்டது.
 
அதனை தொடர்ந்தே தமது பகுதியில் வெள்ளம் தேங்கி நிற்கின்றது.  இது தொடர்பாக பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அணை கட்டப்பட்டமை தொடர்பாக தமக்கு எதுவுமே தெரியாது என்று கூறுகின்றனர். 
 
இது தொடர்பாக எங்கு சென்று முறையிடுவது என்று எங்களுக்கு தெரியாது. நாங்கள் அன்றாடம் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்துபவர்கள் என்பதற்காக எங்களை ஏமாற்றப் பார்க்கின்றார்கள்.
 
வீடு முழுவதும் வெள்ளம் நிற்கின்றது இதனால் வளர்ப்பு பிராணிகள் எல்லாம் சாவடைந்து விட்டது. காரைநகரில் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட இடம் எங்களுடைய பிரதேசம்.
 
ஆனால் இதுவரை எந்த அதிகாரிகளும் தமது பகுதிகளுக்கு வந்து பார்வையிடவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.