பக்கங்கள்

பக்கங்கள்

1 டிச., 2014

ஜனாதிபதியுடன் மு.கா.சந்திப்பு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்குடன் அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் மற்றும் ஹசன் அலி ஆகியோரும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள், கிழக்கு மாகாணசபை மற்றும் ஏனைய அரசியல் விவகாரங்கள் தொடர்பில் பேசப்பட்டதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அத்துடன், அரசாங்கத் தரப்புடன் தொடர்ந்து பேசவும் இச்சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.