பக்கங்கள்

பக்கங்கள்

9 டிச., 2014


இலங்கை விவகாரத்தில் காங்கிரஸைபோல்தான் பாஜகவும் நடக்கிறது: வைகோ
பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து மதிமுக விலகியது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறியபோது,  கூட்டணி கட்சியை மதிப்பதில் வாஜ்பாய் எடுத்துக்காட்டாக திகழ்ந்தார். 

இப்போது அப்படி இல்லை. இலங்கை இனப்படுகொலைக்கு காங்கிரஸ் துணை போனது. இலங்கை விவகாரத்தில் காங்கிரஸைபோல்தான் பாஜகவும் நடக்கிறது. அதனால் தான் நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது என்று தெரிவித்தார்.