பக்கங்கள்

பக்கங்கள்

9 டிச., 2014

கடும் எதிர்ப்பையும் மீறி திருப்பதி வந்தார் ராஜபக்சே 




இலங்கை அதிபர் ராஜபக்சே ஆந்திர மாநிலம், திருப்பதிக்கு வந்துள்ளார். இரவு திருமலை பத்மாவதி நகரில் உள்ள விடுதியில் தங்கி இருக்கும்
ராஜபக்சே புதன்கிழமை அதிகாலை 2.45 மணி அளவில் சுப்பரபாத சேவையின் போது ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்.

செவ்வாய்க்கிழமை மாலை ரேணிகுண்டா விமான நிலையம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அலிப்ரி பகுதியை வந்தடைந்த ராஜபக்சே கார் மூலம் திருமலையை சென்றடைந்தார். ஆந்திர மாநில காவல்துறையினர் ராஜபக்சேவுக்கு மரியாதை அளித்தனர். 

ராஜபக்சே வருகைக்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் திருப்பதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.