பக்கங்கள்

பக்கங்கள்

10 டிச., 2014

பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான முதல் டெஸ்ட் போட்டி; மழையால் ஆட்டம் நிறுத்தம்

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் பங்கேற்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நேற்று துவங்கியது.

முதல் நாள் ஆட்டத்தில் 89.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி உணவு இடைவேளைக்கு முன் வரை 101.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்களை எடுத்து விளையாடி வருகி்றது. ஸ்டீவன் ஸ்மித் 98 ரன்களுடனும், மைகேல் கிளார்க் 85 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் மழை குறுக்கீட்டால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.