பக்கங்கள்

பக்கங்கள்

10 டிச., 2014

வைகை அணையில் இருந்து புதன்கிழமை (டிச. 10) முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். 
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிவிப்பு:

 தேனி மாவட்டத்திலுள்ள வைகை அணையில் இருந்து வைகை பழைய பாசன பகுதி 1-ன் கீழுள்ள நிலங்களுக்குப் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விட விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களது வேண்டுகோளை ஏற்று, வைகை அணையில் இருந்து புதன்கிழமை முதல் தண்ணர் திறந்து விட உத்தரவிடப்படுகிறது. இதனால், மதுரை மாவட்டத்திலுள்ள 27 ஆயிரத்து 259 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.