பக்கங்கள்

பக்கங்கள்

21 டிச., 2014

சோ வீட்டில் அமித்ஷா
சென்னை வந்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, இன்று காலை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள பத்திரிகையாளர் ‘சோ’ வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார்.

இருவரும் சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பு பற்றி சோ–விடம் கேட்ட போது நட்பு ரீதியில், அமித்ஷா தன்னை சந்தித்ததாக கூறினார்.

அரசியல் நிலவரம் குறித்து பேசினீர்களா? என்று கேட்டதற்கு, அரசியல் பற்றி விவாதித்ததாகவும், ஆனால் அது பற்றி வெளிப்படையாக தன்னால் கூற முடியாது என்றும் சோ தெரிவித்தார்.

சோ– அமித்ஷா சந்திப்பு, பாரதீய ஜனதா கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.