பக்கங்கள்

பக்கங்கள்

5 டிச., 2014

தமிழகத்தில் சூடுபிடிக்கும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிகழ்வுகள் 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிகழ்வுகள் தமிழ் நாட்டில் அதிகரித்து வருவதாக இந்திய ஊடகம் ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது.


கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான நிகழ்வுகள் பாரிய அளவில் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 60வது பிறந்தநாளை  கொண்டாடியுள்ளனர்.

அதுமட்டுமல்லாது தமிழ் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் நவம்பர் மாதம் 27ம் திகதி, மாவீரர் நாளும் அனுஸ்ட்டிக்கப்பட்டதுடன். இதனையொட்டிய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டதை அடுத்து, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 33 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவும் இந்த தடையை தொடர்ந்தும் நீடித்து வருகிறது.

எனினும் இவற்றையெல்லாம் மீறி தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிகழ்வுகள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.