பக்கங்கள்

பக்கங்கள்

10 டிச., 2014

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருத்தணியில் சாலை மறியலில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினர் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.


இந்நிலையில் திருத்தணி தடுக்கப்பேட்டையில், திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க.வினர் 500 பேர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட்னர்.  ம.தி.மு.க.வினரின் இந்த சாலை மறியலால், திருப்பதி-சென்னை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும், ராஜபக்சேவின் உருவ பொம்மையை எரித்தும் ம.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் ம.தி.மு.க.வினரை கைது செய்தனர்.