பக்கங்கள்

பக்கங்கள்

1 டிச., 2014

மஹேல- சங்கக்கார அசத்தல்; இலங்கை அணி அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான இர ண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி எட்டு விக்கெட்டுகளினால் அபார வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 43 ஓவர்களில் சகல விக ;கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றது.

இந்தப் போட்டி சீரற்ற வானிலை காரணமாக 45 ஓவர்களுக்கு மட்டுப்படுத்த ப்பட்டிருந்தது.

இங்கிலாந்து அணி சார்பாக ரவி போப்பரா 51 ஓட்டங்களையும், ஜோ ரூட் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்து வீச்சில் அஞ்சலோ மத்யூஸ் மற்றும் திஸர பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

186 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 34.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இலங்கை துடுப்பாட்டத்தில் குமார் சங்கக்கார 67 ஓட்டங்களையும், மஹேல ஜெயவர்த்தனே 77 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்று அணியை வெற்றி பெறச் செய்தனர்.

7 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் 2 :0 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை முன் னிலை பெற்றுள்ளது. இ;ப்போ ட்டியின் ஆட்டநாயகனாக இல ங்கையின் மஹேல ஜெயவர்த்ன தெரிவா
னா