பக்கங்கள்

பக்கங்கள்

1 டிச., 2014

நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங் மீது தேர்தல் ஆணையத்திடம் தேசிய மாநாட்டுக் கட்சி புகார்
பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, நடத்தை விதிகளை மீறியதாக தேசிய மாநாட்டுக் கட்சி தேர்தல்
ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.

உதம்பூர், பூஞ்ச் நகரங்களில் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தபோது, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்து பேசியதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஸ்ரீநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்தவாறு தொலைபேசி மூலமாக பகல்கா மாவட்டம், அகால்டாவில் கூடியிருந்த மக்களிடையே பிரச்சாரம் செய்ததாகவும், இதற்கு அரசுக்கு சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தேசிய மாநாட்டுக் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.