பக்கங்கள்

பக்கங்கள்

26 டிச., 2014

இதொகாவும் உடைகிறது – மைத்திரி பக்கம் பாய்ந்தார் உபதலைவர்

cwc


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ள அவர் இதனை முறைப்படி அறிவித்துள்ளார்.
ஏற்கனவே இதொகாவில் இருந்து நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள் இராஜதுரை ஐதேகவில் இணைந்து கொண்டதுடன், எதிரணியின் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இதனிடையே, தமது கட்சி சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கே ஆதரவு வழங்குவதாக இதொகா தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.