பக்கங்கள்

பக்கங்கள்

26 டிச., 2014

அரசாங்கத்தில் இருந்து முக்கிய அமைச்சர் ஒருவர் இன்று விலகுவார்

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு இன்னமும் 13 நாட்களே உள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து முக்கிய அமைச்சர் ஒருவர் இன்று விலகுவார்
என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பொது பல சேனாவின் ஆதரவுடன் போட்டியிடுவாரேயானால், தாம் அரசாங்கத்தில் இருந்து விலகுவேன் என்று பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
நேற்று முன்தினம், பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா இன்று அரசாங்கத்தில் இருந்து விலகுவார் என்று உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் இன்று தமது முடிவை ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.