பக்கங்கள்

பக்கங்கள்

28 டிச., 2014

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி : பிற கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை



ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொது செயலாளர் ராம் மாதவ் நிருபர்களிடம் இன்று கூறுகையில், ’’ஜம்மு-காஷ்மீரில் நாங்கள் ஒரு கட்டாய நிலையில் இருக்கிறோம்.  அரசு அமைப்பதில் நாங்கள் ஈடுபடுவோம்.

அது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது.  என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்’’ என்று கூறியுள்ளார்.