பக்கங்கள்

பக்கங்கள்

28 டிச., 2014

யாரை ஆதரிப்பது?; கூட்டமைப்பு கூடுகிறது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பிலான முடிவினை மேற்கொள்ளுமுகமாக தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு ஞாயிற்றுக்கிழமை கூடிப் பேசவுள்ளது. மேற்படி கூட்டம் கொழும்பில் மாலை  6 மணிக்கு இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று சனிக்கிழமை நாடு திரும்பிய நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இதேவேளை யாரை ஆதரிப்பது என்ற முடிவினை மேற்கொண்ட பின்பே தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்குமுகமாக கொழும்பில்  ஊடகவியலாளர் மகா நாட்டை கூட்டமைப்பு நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.