பக்கங்கள்

பக்கங்கள்

8 டிச., 2014

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அரசாங்கத்தில் இணைந்து கொண்டார்- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து விலகிய திஸ்ஸ அத்தநாயக்க, அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதாக
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்த பின்னர் மஹிந்த ராஜபக்ச இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே இன்று காலை தமது பதவி விலகல் கடிதத்தை திஸ்ஸ அத்தநாயக்க கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்த போதும் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் திஸ்ஸ அத்தநாயக்கவின் கருத்து எதுவும் இன்னும் வெளியாகவில்லை.