பக்கங்கள்

பக்கங்கள்

8 டிச., 2014

மைத்திரியின் தேர்தல் ஊர்வலத்தில் மகிந்த வழங்கிய மோ.சைக்கிள் 
அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு மகிந்த ராஜபக்சவின் சலுகைகள் அறிவிக்கப்ப ட்டாலும் அவர்களில் பலர் எதிர்க்கட்சி பொதுவேட்பாளருக்கு வெளிப்படையாகவே ஆதரவை வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கையில் தற்போது ஜனாதிபதி தேர்தலை குறி வைத்து அரச ஊழியர்களுக்கு
மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த மோட்டார் சைக்கிள்கள் கிடைக்கப்பெற்றவர்கள் மகிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாக அமைந்துள்ளது.

எனினும் அண்மையில் பொல நறுவையில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற கூட்டத்துக்கு முன்னர் ஊர்வலம் ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இதன்போது ஊர்வலத்தில் பல மோட்டார் சைக்கிளோட்டிகளும் பங்கேற்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மோட்டார்சைக்கிள்களுடன் ஊர்வலத்தில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.