பக்கங்கள்

பக்கங்கள்

8 டிச., 2014

சொல்லாமலும் சொல்விட்டும் கட்சி தாவிய பொதுச்செயலாளர்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் இரவு ஒன்றாக இருந்து அப்பம் உண்டு விட்டு காலையில் யாருக்கும்
தெரியாமல் கட்சி மாறிச் சென்றார்.
ஆனால், எதிர்க்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவோ தனது பதவியை இராஜனாமாச் செய்துவிட்டு வந்துள்ளார் என புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்
ஐ.தே.க.யின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் ஸ்ரீ.ல.சு.கட்சியுடனான இணைவு குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்
இதேவேளை, ஜனாதிபதியும் திஸ்ஸ அத்தநாயக்காவும் களனி வித்தியாலங்கார பிரிவெனாவுக்கும் களனி ரஜமஹா விகாரைக்கும், புதிய விஷ்ணு தேவாலயத்துக்கும் சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்