பக்கங்கள்

பக்கங்கள்

4 டிச., 2014

தி.மு.க.வில் தலைவருக்கும், பொதுச்செயலாளருக்கும் மட்டும்தான் அதிகாரம் உள்ளது: மு.க.அழகிரி பேட்டி

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, புதன்கிழமை மாலை மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். 

கேள்வி:- உங்கள் நண்பர் ஜி.கே.வாசன் புதிதாக கட்சி தொடங்கி உள்ளாரே?

பதில்:- இது ஜனநாயக நாடு. யார் வேண்டும் என்றாலும் கட்சியை தொடங்க உரிமை உள்ளது. ஜி.கே.வாசனும் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். இதில் தவறு எதுவும் இல்லை.

கேள்வி:- தி.மு.க.வில் இருந்து விலகியவர்களும், நீக்கப்பட்டவர்களும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் கூறி உள்ளாரே?

பதில்:- இவருக்கு அந்த அதிகாரம் யார் தந்தது?. தி.மு.க. கட்சியில் தலைவருக்கும், பொதுச்செயலாளருக்கும் மட்டும்தான் அந்த அதிகாரம் உள்ளது என்றார். 

மேலும் அவரிடம், “தி.மு.க. உட்கட்சி தேர்தலில் கோஷ்டி பூசல் அதிகமாகி இருக்கிறதே?” என கேட்டதற்கு பதில் எதுவும் கூறாமல் சென்றுவிட்டார்.