பக்கங்கள்

பக்கங்கள்

7 டிச., 2014

விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த மசகு எண்ணெய் மீட்பு
முல்லைத்தீவு - வெள்ளமுள்ளி வாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த மசகு எண்ணெய் பெரல்கள்
ஒன்பது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வெள்ளமுள்ளி வாய்க்கால் கடற்கரைப் பகுதியில் இருந்து இராணுவத்தினர் இதனை மீட்டுள்ளனர்.
இறுதி யுத்தத்தின் போது, கடற் புலிகளினால் தங்களது படகுகளுக்கு பயன்படுத்த இவை பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் யுத்த காலத்தில் அந்தப் பகுதியில் கடற்புலிகளின் முகாம் அமைந்திருந்ததாக தெரியவந்துள்ளது.