பக்கங்கள்

பக்கங்கள்

7 டிச., 2014

தமிழர்களின் தேசிய அபிலாசைகளை அதிகார ஆக்கிரமிப்புக்களால் சிதைத்துவிட முடியாது: சிறீதரன் எம்பி
அதிகார வர்க்கத்தால் தமிழர்களுக்கான தேசிய அபிலாசைகளை அதிகார மமதையால் அழித்துவிட முடியாது. தேசிய இனமான தமிழர்கள் அதற்காக பல தியாகங்களைப் புரிந்திருக்கிறார்கள் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
2014இன் தனது வரவு செலவுத்திட்ட நிதியினூடாக மிருசுவில் நேயம் சமூக நிலையத்துக்கு அறிவியல் நூல்களை வழங்கும் நிகழ்வு இன்று பி.ப 3.00 மணியளவில் இடம்பெற்றது.
நேயம் சமூக நிலையத் தலைவர் திரு.செந்தூரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சமூக ஆர்வலர் .தங்கவேல், நேயம் சமூக நிலைய உபதலைவர், சிறீபஞ்சலிங்கம், நேயம் சமூக நிலைய நூலக காப்பாளர் கீர்த்திகா எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய பா.உ சி.சிறீதரன்,
தமிழர்கள் தங்களுக்கே உரித்தான இறைமையின் அடிப்படையிலான சுயவாழ்வு பற்றி மிக பக்குவமாக சிந்தித்து வருகின்றார்கள்.
இழந்துபோன தங்களுடைய தேசத்தின் இறைமைபற்றி அவர்கள் கொண்டிருக்கும் எண்ணமானது நிராகரிக்கப்பட முடியாதது.
ஏனெனில் வடக்கு கிழக்கில் தமிழர்கள் தங்களுக்கு வரலாற்று ரீதியான நிலப்பரப்பையும் பரம்பரை அடிப்படையிலான கலாச்சார பண்பாடுகளையும் உலகச் செம்மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியின் உரித்தையும் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கான தத்துவ அடிப்படையையும் அவர்கள் கொண்டிருக்கிறார்கள்.
தங்கள் பரம்பரை இழப்பின் சாம்பல் மேடுகளிலிருந்து தமக்கேயுரித்தான உரிமை பற்றி பேசுவதற்கு உரிமையுடையவர்கள். இதையாரும் ஆக்கிரமிப்பை பிரயோகித்து அழித்து விடமுடியாது என்றார்.