பக்கங்கள்

பக்கங்கள்

26 டிச., 2014

வவுனியா தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் மகிந்த அரசு பக்கம் தாவினர்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையின் உறுப்பினர்கள் மூவர், ஐ.தேக. உறுப்பினர்
ஒருவருமாக நால்வர் சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் என அறிவித்துள்ளனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இந்த முடிவை அறிவித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்களான இராஜசேகரன், சுபாஸ்கரன், பார்த்தீபன் ஆகிய மூவரும் ஐ.தே.க.வைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் பிரசாத் ஆகியோரே இவ்வாறு கட்சி தாவியுள்ளனர்.