பக்கங்கள்

பக்கங்கள்

19 டிச., 2014

அரச நிறுவனங்களில் தேர்தல் பரப்புரைக்குத் தடை 
 அரச நிறுவனங்களில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்காக பரப்புரையினை மேற்கொள்ளுபவர்கள் மீது சட்ட
 நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
 
இதன்படி பாடசாலைகள், மாகாண சபைகள் , உள்ளுராட்சி சபைகள், கூட்டுத்தாபனங்கள், அரச சபைகள், வைத்தியசாலைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் பரப்புரை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.