பக்கங்கள்

பக்கங்கள்

10 டிச., 2014

சிறந்த கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தித் தரும் மாநகராட்சியாக சென்னை மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:

சென்னையில் திறந்தவெளி கழிப்பிடங்களை அகற்றுவதற்காக 348 இடங்களில் நவீன கழிப்பிடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதில் 303 கழிப்பிடங்களுக்கு பணியாணை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், "பொதுமக்களுக்கு சிறந்த கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தித் தரும் மாநிலம்' என்ற தலைப்பில் சென்னை மாநகராட்சிக்கு "வாஷ்ரூம் அண்டு பியாண்ட்' என்ற பத்திரிகை நிறுவனம் விருது வழங்கியுள்ளது. இந்த விருது வழங்கும் விழா, மும்பையில் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி சார்பில் செயற்பொறியாளர் ஏ.எஸ். முருகன் விருதை பெற்றுக் கொண்டார்.