பக்கங்கள்

பக்கங்கள்

23 டிச., 2014

கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எதிர்க்கட்சியில் இணைவு-கிழக்கு மாகாணசபை ஆளும் கட்சியை விட்டு போகக்கூடிய அபாய நிலை

கிழக்கு மாகாணசபையின் தவிசாளர் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் பிரியந்த பத்திரணவே இவ்வாறு ஆளும் கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். 
கொழும்பு எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று
நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் பத்திரண போட்டியிட்டு வெற்றியீட்டிருந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாகாணசபையின் தவிசாளர் பதவியை துறந்ததைத் தொடர்ந்து கிழக்கு மாகாணசபை ஆளும் கட்சியை விட்டு போகக்கூடிய அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதுரலிய ரதன தேரரின் ஆலோசனைக்கு அமைய பத்திரண தமக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.