பக்கங்கள்

பக்கங்கள்

4 டிச., 2014

கற்குவாறி வீதியூடாக வான்பாய்கிறது குளம் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள ஆசைப்பிள்ளைகுளம் நேற்று முன்தினம் காலை தொடக்கம் வான்பாயத் தொடங்கியுள்ளது.

அண்மைய நாட்களாக பெய்து வரும் கடும் மழைகாரணமாக இக் குளம் நிரம்பிய நிலையில் மூன்று அடிக்கு மேல் நீரானது வான் பாயத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பாய்ந்துவரும் நீரானது கற்குவாறி பகுதிக்குச் செல் லும் வீதியைக் குறுக்கறுத்து மாங்குளம் ஏ-9 வீதியூடாக இரணைமடு குளத்தை சென்றடைகின்றது.

கற்குவாறி பகுதியில் 60 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கற்குவாரி வீதியூடாக பாடசாலை மாணவர்கள், வாகனங்கள், விவசாயிகள் எனப் பலதரப்பி னரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாங்குளம் நகரப் பகுதிக்கு வரவே ண்டியுள்ளது.

அத்துடன் இவர்களுக்கான பாட சாலை, வைத்தியசாலை, கடைகள் அனைத்துமே மாங்குளம் நகரிலேயே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆசைப்பிள்ளைக் குளம் வான்பாயத் தொடங்கியமையால், தமது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது உள்ளதாக கற்குவாரி மக்கள் தெரிவிக்கி ன்றனர்.