பக்கங்கள்

பக்கங்கள்

4 டிச., 2014

தங்கம் வாங்க சென்ற தமிழர்கள் தவிப்பு 
 போரின் போது வடக்கு தமிழ் மக்களால் கைவிடப்பட்ட தங்க நகைகளின் ஒரு தொகுதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் இன்று கையளிக்கப்படும்
என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இவற்றைப் பெறுவதற்குக் கிளிநொச்சியில் இருந்து அழைக்கப்பட்டவர்கள் ஆண்கள் பெண்கள் என வேறாக்கப்பட்டு இராணுவ முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர் என அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
 
அவர்கள் தமக்கு நகைகள் வேண்டாம் வீட்டுக்குச் செல்லவிடுங்கள் என்று கேட்டபோதும் அதற்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்தனர் என்றும் உறவினர்கள் கூறினர்.