பக்கங்கள்

பக்கங்கள்

9 டிச., 2014

மீனவர் விவகாரம் குறித்து ராஜபக்சவுடன் தொடர்ந்து பேசுகிறார் மோடி: சுஷ்மா
கிள்ளுவதும் நாங்களே தாலாட்டு படுவதும் நாங்களே 
மீனவர்கள் பிரச்னை குறித்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுன் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பேசி வருகிறார் என்று இந்திய
மக்களவையில் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
மக்களவை இன்று காலை கூடியதும், அதிமுக சார்பில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், இலங்கை வசம் உள்ள படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பேசி வருவதாகக் கூறினார்.
அப்போது, அதிமுக எம்.பி. குமார், தமிழக மீனவர்கள் விவகாரத்தைத் தீர்க்க வேண்டும் என்றால் கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.