பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜன., 2015

நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவகாரங்களில் தலையிட்டு 10 ஆண்டுகளாகிவிட்டது : ப.சிதம்பரம்


காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் கட்டி அலுவலகத்தில் கடந்த 24–ந்தேதி (சனிக்கிழமை) அவர் கட்சியினரை சந்தித்தார். 

அவர்களிடையே அவர் பேசியபோது,  ‘’முன்பு ஆண்டு தோறும் செப்டம்பரில் கல்விக்கடன் முகாம் நடத்துவோம். இப்போது கல்விக் கடன் என்ற பேச்சே இல்லை. ஒரு வங்கி கிளை வந்திருக்கிறதா? இங்கிருக்கிற அ.தி.மு.க. ஆட்சிக்கு அதுபற்றி அக்கறையே கிடையாது. இந்தத் தேர்தலில் நமக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக நான் சொல்லவில்லை. ஆனால் காசு வாங்கிக் கொண்டு வாக்களிப்பது என்று முடிவெடுத்தது மிகப் பெரிய தவறு. அந்தத் தவறின் கொடுமையை இப்போது அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவகாரங்களில் தலையிட்டு 10 ஆண்டுகளாகிவிட்டது. நம்மால் காங்கிரஸ் கட்சியை உயிரோட்டமுள்ள கட்சியாக வைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மாவட்ட கமிட்டி நிர்வாகிகள் பட்டியல் வெளியான பிறகு சிவகங்கை மாவட்டத்தில் கண்டிப்பாக 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை கூட்டி மாநாடு நடத்தி