பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜன., 2015

உலகக்கிண்ணம் 2015: இலங்கை அணி அறிவிப்பு – மலிங்காவுக்கு இடம்


அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் காயமடைந்துள்ள இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மலிங்கா சேர்க்கப்பட்டுள்ளார். இவர் உடல் தகுதி பெற்றால் விளையாடலாம் என்ற நிபந்தனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பெப்ரவரி 14ம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இலங்கை களமிறங்குகிறது. இந்தப் போட்டி கிறைஸ்ட் சர்ச்சில் நடைபெறுகிறது.
இலங்கையின் உலகக்கிண்ண அணி வருமாறு:
அஞ்சேலோ மேத்யூஸ் (அணித்தலைவர்), திலகரத்ன டில்ஷான், குமார் சங்கக்காரா, மஹலா ஜெயவர்த்தனே. லாஹிரு திரிமன்ன (துணை அணித்தலைவர்), தினேஷ் சந்திமால், திமுத் கருணரத்னே, ஜீவன் மெண்டிஸ், திசர பெரேரா, சுரங்க லக்மல், லஷித் மலிங்கா (உடற்தகுதி பெற்றால்), தம்மிக பிரசாத், நுவன் குலசேகரா, ரங்கன்னா ஹேரத், சசித்ர சேனநாயக.