பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜன., 2015

அமைச்சரவையின் எண்ணிக்கை 25 விட அதிகரிக்கலாம்


அமைச்சரவையின் எண்ணிக்கை 25 விடவும் அதிகரிக்கலாம் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எண்ணிக்கை 25ஐ விடவும் உயர்வடையக் கூடுமென குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றின் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவையின் எண்ணிக்கை 25 விடவும் உயர்வடையக் கூடும்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் அமைச்சரவையின் எண்ணிக்கை 25 ஆக வரையறுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.