பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜன., 2015

வடக்கு மாகாண ஆளுநர் ராஜினாமா? - நாட்டைவிட்டு வெளியேற திட்டம்!


வடக்கு மாகாண ஆளுநராகக் கடமையாற்றும் ஜீ.ஏ.சந்திரசிறி, ஆட்சி மாற்றத்தை அடுத்து தனது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு அவுஸ்திரேலியாவில் குடியேறத் திட்டமிட்டுள்ளார் என்று நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியுள்ள அவர், நாளை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வந்து தனது உடமைகளை எடுத்துச் செல்வார்தெரிவிக்கப்படுகிறது.
புதிய ஜனாதிபதியின் கீழ் பணியாற்ற அவர் விரும்பவில்லை என்றும், இதனால் தனது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் அவரது குடும்பத்தாருடன் சென்று குடியேற அவர் முடிவு செய்துள்ளார் என்றும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன்.
இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால, வடக்குக்கு புதிய ஆளுநர் ஒருவரை விரைவில் நியமிப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது,