பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜன., 2015

மகிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் விட்டுச் சென்ற ஆயிரத்து 500 கோடி ரூபா பணம் சிக்கியுள்ளதாக தகவல்கள்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் விட்டுச் சென்ற ஆயிரத்து 500 கோடி ரூபா பணம் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டை 9 ஆண்டுகள் ஆட்சி செய்த மகிந்த ராஜபக்ஷ கடந்த 9 அதிகாலை தோல்வியை தவிர்க்க திட்டமிட்ட இராணுவ சதித்திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து அலரி மாளிகையில் இருந்து வெளியேறினார்.
அலரி மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ஆயிரத்து 500 கோடி ரூபா பணத்தை அங்கேயே வைத்து விட்டுச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
அலரி மாளிகையில் ஒரு இரகசிய அறையில் இந்த பணம் இருந்துள்ளதுடன் அதில் இலங்கை நாணயத்தாள்களும் வெளிநாட்டு நாணயத்தாள்களும் இருந்துள்ளன.
மகிந்த வெளியேறிய போது மறந்து விட்டுச் சென்ற பணம் இந்தளவு தொகையாக இருக்கும் அவர் எந்தளவு தொகை பணத்தை தன்னுடன் எடுத்துச் சென்றிருக்கலாம் என அலரி மாளிகையின் பேச்சாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எவ்வாறாயினும் அலரி மாளிகையில் இந்த பணம் குறித்து திறைசேரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ராஜபக்ஷவினர் அரச பாதுகாப்பு நிதியத்தில் இருந்து தாம் எண்ணியபடி பணத்தை எடுத்து செலவு செய்துள்ளதாகவும் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாவை அவர்கள் இவ்வாறு செலவு செய்திருப்பதாகவும் நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு நிதியத்தின் தெப்ரபேன் கிளையில் இருந்த 20 ஆயிரம் கோடி ரூபா பணத்தில் தற்போது 7 ஆயிரம் கோடி ரூபா மாத்திரமே எஞ்சியிருப்பதாக கூறப்படுகிறது.
13 ஆயிரத்து 500 கோடி ரூபாவை பாதுகாப்பு அமைச்சராகவும் நிதியமைச்சராகவும் இருந்த மகிந்த ராஜபக்ஷ எவ்விதமான ஆவணங்களிலும் பதிவு செய்யாமல் தான் எண்ணியபடி செலவு செய்துள்ளார்.
இந்த நிதி மோசடியால், மகிந்த ராஜபக்ஷ சிறைக்கு செல்வதை எந்த ஜாம்பவானாலும் தடுக்க முடியாது என நிதியமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.
தொடர்புடைய செய்தி: