பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜன., 2015

புத்தளத்தில் 58 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு


ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக  புத்தளம் நகர சபையின் களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த
58 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் நகரசபை முன்னாள் உறுப்பினர் உதில ரத்நாயக்க பொலிஸ் நிலையத்தில் முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் வரக்காபொல – அலவிவத்த பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த  டிபென்டர் வகை வாகனம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வாகனத்தின் இலக்கத்தகடு நீக்கப்பட்ட நிலையிலேயே வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.