பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜன., 2015

கிளிநொச்சியில் மோதிக் கொண்ட பேருந்து ஊழியர்கள்


இலங்கை போக்குவரத்துச் சபை கிளிநொச்சி சாலை ஊழியர்களுக்கும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது
என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி இராமநாதபுரம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டது. 
இதையடுத்து இ.போ.ச ஊழியகளுக்கும், தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.
இந்தக் கைகலப்பை தொடர்ந்து அந்தப் பகுதிக்கு விரைந்து சென்ற  பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.