பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜன., 2015

கணவன் கழுத்தறுத்துக் கொலை தற்கொலைக்கு முயன்ற மனைவி கைது

பேருவளை மாகல்கந்தயில் , கணவனை கழுத்தை அறுத்துக் கொலைசெய்தார் என்ற குற்றச்சாட்டில்
அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக   பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   மனைவியின் கள்ளக்காதலனான  மீனவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர், கொலைசெய்யப்பட்டவரின் இளைய சகோதரர் என்று விசாரணைகளின் ஊடாகத் தெரிவிக்கப்படுகின்றது.  கைது செய்யப்பட்ட மனைவி,  ஒருவகையான நச்சுக்காயை கடித்து தற்கொலை செய்துகொள்வதற்கு முயன்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவரது மனைவியிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.