பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜன., 2015

பல்வேறு செய்தி இணையத் தளங்கள் இலங்கையில் பார்க்க முடியாதவாறு முடக்கம்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நாளை  வியாழக்கிழமை  நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு
செய்தி  இணையத்தளங்கள் பார்வையிட முடியாதவாறு அரசாங்கத்தினால் முடக்கப்பட்டுள்ளன. தேர்தல் பிரசாரங்கள் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் நிறைவடைந்ததையடுத்து, தேர்தல் பரபரப்புக்களும் பதற்றங்களும் அனைவரையும் ஆட்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. அந்த வகையில், இலங்கையில் அதிரடியாக பல செய்தி இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து இயங்கும் தமிழ் ஊடகங்களும்  அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் இயங்கும் ஊடகங்களுமே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன.