பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜன., 2015

ஜனாதிபதி தேர்தல்; பாடசாலைகளுக்கு விடுமுறை


நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று முதல் மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 
 
நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காகவே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி இன்று 7ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை இந்த விடுமுறையினை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
 
மேலும் எதிர்வரும் 12 ஆம் திகதியே பாடசாலை மீண்டும் திறக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 
 
இதேவேளை, முதலாம் தவணைக்காக கடந்த 5ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.