பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜன., 2015

மைத்திரியின் சகோதரர் பிணையில் விடுதலை


எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரன் கப்பில சிறிசேன பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில்
விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மூன்றாம் திகதி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மீது கப்பில சிறிசேன தாக்குதல் நடத்தியுள்ளதாக அரலகங்வில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் 5 ஆம் திகதி சந்தேகநபர் அரலகங்வில பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் அன்றைய தினமே சந்தேகநபர் பொலன்னறுவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.