பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜன., 2015

இராணுவத்தினரில் தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிப்பு


விளையாடிக் கொண்டிருந்தவேளை இராணுவ முகாமிற்குள் சென்ற பந்தை எடுக்கச் சென்றவரை இராணுவத்தினர் கடுமையாக
தாக்கியதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் நேற்று மாலை முறைப்பாடு செய்துள்ளார்.
 
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 
 
வல்வெட்டித்துறை எள்ளங்குளம் பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த வேளை இராணுவ முகாமுக்குள் பந்து சென்றுவிட்டது.  
 
 
அதனை எடுப்பதற்கு சென்ற இளைஞன் இராணுவத்தினால் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் ஊரணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
இவ்வாறு தாக்கப்பட்டவர் குறித்த பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராஜா ஜெகன்(வயது- 29) என்பவராவார். 
 
தாக்கப்பட்டவேளை குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் சம்பவ இடத்தை விட்டு தப்பிவிட்டனர். 
 
எனினும் அவர் மைதானத்திற்கு சென்றிருந்த மோட்டார் சைக்கிளை இரணுவத்தினர் தங்களது முகாமிற்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் மோட்டார் சைக்கிளை முகாமிற்கு வந்து எடுத்துச் செல்லுமாறு அவருடைய வீட்டுக்கு சென்ற இராணுவத்தினர் கூறினர்.
 
அதன்போது தனது தாய் , சகோதரியுடன்  இராணுவ முகாமிற்குச் சென்ற இளைஞன் மீண்டும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
 
அவரது உடல் மற்றும் காது பகுதியில் காயங்கள் காணப்படுகின்ற நிலையில் வல்வெட்டித்துறை பொலிஜ் நிலையில் தான் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் முறைப்பாட்டினைப் பதிவு செய்துள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=362833830825889375#sthash.hTBaPWW8.dpuf